...

3 views

காதலிசம்
சுற்றி என்னவள்
சுவாசம் வேண்டும்!
பற்றி அணைக்கும்
பாசம் வேண்டும்!
நெற்றி முத்தமிடும்
நெருடல் வேண்டும்!
வற்றிய வாழ்வில்
வருடல் வேண்டும்!
ஒற்றை காதலை
உணர்ந்திட வேண்டும்!
சற்று நேரம்
சண்டையிட வேண்டும்!
உற்ற பொழுதில்
உருகிட வேண்டும்!
வெற்றிட விரலுக்கு
கோர்வை வேண்டும்!
சுற்றி என்னவள்
சுவாசம் வேண்டும்!...
© Tamil