...

2 views

அவளதிகாரம்
இது காதலா யார் அறிவார்,
அவளும் நானும் ஒன்றாய் சென்ற நொடிகள் பல இருக்க, அவளிடம் பேசிய நிமிடங்கள் யோசித்த பொழுதில் என்னை மறந்து அவள் வசம் இருந்த காலங்கள் அதிகமோ,
இது மாயமோ இல்லை காதலின் மோகமோ,
மோகம் தீண்டிய காதல் பயணமோ,
நட்பின் இலக்கணமோ,
இலக்கணம் ஈட்டிய இசையோ,
புரியாத மொழியில் வரிகள் இருப்பது போல் புரிந்த மொழியில் தெரியா விடைகள் இருக்க இது தான் வினா என்பதை உறுதி செய்யவே இந்த வாழ்நாள் போதுமோ.
© அருள்மொழி வேந்தன்

Related Stories