...

14 views

என்னைப் போலவே...
இளையவளே...

நீ
குளித்தெழுந்த
அல்லிக்குளமும்
நடை போட்ட பாதையும்

வேலிப்படலும்
வெள்ளைப் பசுவும்

ஓட்டு வீடும்
ஓட்டுநர் உரிமமும்

இரு சக்கர வாகனமும்
ஒரு மடிக்கணினியும்

படித்து வாங்கிய பட்டங்களும்
பணி புரிந்த அரசுப் பள்ளியும்

கார் வானமும்
வெள்ளி நிலவும்

எழுதிக் குவித்த கவிதைகளும்
வெளியிட்ட கவிதை நூல்களும்

பரதக் கலையின் சலங்கைகளும்
சிலம்புச் சண்டையின் கேடயமும்

என்னைப் போலவே வாடுகின்றன
நீ இல்லா வெறுமையில்..

© வேல்முருகன் கவிதைகள்