...

2 views

மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டு நான் காத்திருக்க மொத்தமாய் நடந்து வந்ததை அறியேன். என் இமை மூடி திறக்கும் பொழுதில் கண்டேன் ஒற்றை விழி பார்வையில் மொத்த பூலோகம் மறந்து போனதை எப்படி உன்னிடம் புரிய வைப்பேன். இந்த பிரபஞ்சத்தில் எழுத படாத கவிதை ஒன்று நீ அல்லவா.
பூலோகம் காணாத காவியம் நீ அல்லவா, சிரிப்பினை கண்ட நொடியில் சிதைந்து போன இதயங்கள் இங்கே பல அதில் எனதும் ஒன்றாள்ளவா,
கார்மேகம் தழுவ மேகக்கூட்டமிடம் சண்டையிட்டு மழை தூர ஏனோ உன்னை அணைத்து கொள்ள அந்த மரங்கள் முன்னே வரவே இந்த இயற்கையும் ஒன்றாய் உன் மீது காதல் கொண்டதோ கவியே...
தமிழ் மொழியின் தாரகையை வர்ணிக்கவே மொத்த எழுத்துக்களும் படை எடுத்து காகிதத்திடம் போர் தொடுக்குதோ...
© அருள்மொழி வேந்தன்

Related Stories