...

42 views

எங்கே கிடைக்கும்?
வங்கிப்பணி பெண்ணுக்கும்
செங்கல் சுமக்கும்
பெண்ணுக்கும்
வேறு வேறு மரியாதை எனில்
எங்கே கிடைக்கும் சமநீதி?

ஒரே மாதிரி
வேலை எனினும்...
வேறுபட்ட கூலியெனில்
எங்கே கிடைக்கும் சமநீதி?

முப்பத்து மூன்று தரவே
யோசனை எனில்
எங்கே கிடைக்கும் சமநீதி?

பறவைகள்
விலங்குகள்
துன்புறுத்தப்படவில்லை
என...
திரையில் காட்டும்
எந்த இயக்குனரும்
பெண்களை ஆபாசமாக
காட்டவில்லை என்று
சொல்லாத போது
எங்கே கிடைக்கும் சமநீதி?
© வேல்முருகன்