...

1 views

மதுவும் மனிதனும்!
வேண்டாமென்று ஒதுங்கித்தான் செல்கிறேன்...
சிரித்துக்கொண்டே கன்னத்தை வருடுகிறாய்!
பார்க்காமல் நழுவத்தான் நினைக்கிறேன்...
கோபித்துக் கொண்டு சினுங்குகிறாய்...
இருந்தும் கடந்துவிடலாம்
என்றாலும்...
குழந்தைப் போல் அடம்பிடிக்கிறாய்!
விட விழைகிறேன்...
விட்டுக் குடுக்க மறுக்கிறாய்!
மாது அவள் போதையை தாங்காமல் தான்...
மது உன்னை தேடி வந்தேன்...
நீயும் சேர்தாய் என்னை
மருத்துவமனைப் படுக்கையில்...
இருந்தும் தள்ளாடுகிறேன்
குடிக்கவும் முடியாமல்!
பிழைக்கவும் முடியாமல்!!


© minmini