...

4 views

பிடிக்கும்
எனக்காக சிரிக்கும் அவன் இதழ்கள் பிடிக்கும்
என்னை கண்டதும் நேசம் காட்டும் அவன் விழிகள் பிடிக்கும்
என் சோகத்தை மறக்க வைக்கும் அவன் பாசம் பிடிக்கும்
என்னை அவனுள் இழுக்கும் அவனின் மாயக்குரல் பிடிக்கும்
என் வலிகளை பிரதிபலிக்கும் அவன் முகம் பிடிக்கும்
என் உலகமாய் அவனை சுற்றிட பிடிக்கும்
என் தாய் தந்தையாய் மாறி என்னை காக்கும் அவன் அன்பு பிடிக்கும்
அழகாய் என்னுள் பதிந்த அவனை பிடிக்கும்
சொல்ல திகட்டாத அவன் நினைவு பிடிக்கும்
நிம்மதியாய் தூங்க வைக்கும் அவன் கையணைப்பு பிடிக்கும்
என் விழிநீரை மாயமாக்கும் அவன் விரல்கள் பிடிக்கும்
அவனை உயிராய் நேசிக்க பிடிக்கும்
என்னுள் எழும் கவிகளின் வரிகளில் அவனை வைத்து பூட்டிட பிடிக்கும்
எதற்கும் அஞ்சாத அவன் தைரியம் பிடிக்கும்
அதிரடியாய் அவன் செய்யும் வம்புகள் பிடிக்கும்
என்னை கலங்க வைக்கும் கவலைகளை தூர நிறுத்தும் அவனின் அருகாமை பிடிக்கும்
என் முகம் சிவக்க அவன் செய்யும் குறும்புகள் பிடிக்கும்
அவனை எண்ணியே வாழ பிடிக்கும்
அவனுக்காக விழும் என் கண்ணீர் பிடிக்கும்
அவன் விழி கண்டு கடைசி நிமிடங்களை கடந்திட பிடிக்கும்


© All Rights Reserved