...

6 views

சூதாட்டக் கணக்கு !
காட்டுவதற்க்-கென்றே

கூட்டு சேர்ந்து -

கட்டுக் - கட்டாய் - காசு

பண்ண-அரைத்த மாவை

மீண்டும் - அரைத்து-

வித்தைத்_ திறம் காட்டிக்-

கஞ்சிக்- கில்லாத-வனுக்கும்

முதற்க்-காட்சி-டிக்கெட்

விற்று - கடனை - யடைத்துக்

காரில்-உலாவி - ஓட்டுக்கு-

வீட்டுத் - தெரு -வேறிக்-

கூட்டுக் -களவானி -

பணியாற்றும்-

சிறுக்- கூட்டம்

காட்டு - காட்டு - எனக்

காட்டிக் - கொண்டி-ருக்கிறது !

வே_றெதையு-மல்ல-

வெட்டுக் - குத்துக் - கதையை !

வெள்ளைக்-கருப்புச்-
சதையைக் - கொண்டப்

படத்தை -

காதல் கதையிலும் சண்டை !

கல்யாணக் கதையிலும் சண்டை !

தொடர்கதையிலும் சண்டை !

சண்டைக் கதையிலோ ,

சண்டையோ சண்டை !

சண்டையில் -திருஷ்டித்-

தேங்காவாய் உடையுது மண்டை !

வாரிசு அரசியல் போல -

கதாநாயகர்களென-

முத்திரைக் குத்தப்பட்ட

நபர்கள் !

அவர்களைத் தூக்கிக்-கொண்டாட -

எத்தனைக் கூட்டங்கள் !

எத்தனை மேடைகள் !

எத்தனை-எத்தனைப்

பக்கவாத்தியங்கள் !

அத்தனையும் - கோடிகளைப்-

புரட்டும் - திட்டம் !

தொடர்ந்து படங்கள் !

தொடரும் மனவேட்டை !

இவர்க-லெல்லாம்

கதாநாயகர்களாய் - வலம் வருகிறார்கள் !

ஆனால்,

ஓடும் குதிரைகள் !

ஓடவைக்கப்படும் குதிரைகள் !

சொல்லப்போனால் ,


படம் பார்ப்பவர்கள் ஏழைப்

பாழைகள் !

இவர்கள் ஆசையைத் தூண்டி

500க்கும்

1000க்கும்

ரீசார்ஜ் செய்ய

வைக்கிறார்கள் ,

இந்த வியாபார விஷமிகள் !

சினிமா,

மினிமா,

இரண்டும்,

சாமானியனை நோக்கி

விடும் அம்பு !


© s lucas