...

3 views

கோபம் என்னும் அவள்
கோபம் என்னும் அவள்...

ஆழ்மனதில் பிறக்கும்
அதிசயப் பெண்குழந்தை...

இவள் குழந்தையாகவே இருக்கும்பொழுது
கொஞ்சல் பரிசுகள் குவிகின்றன...

இவளே கொஞ்சம் வளர்ந்து பருவமடைந்துவிட்டால்
கொடுஞ்சொற்கள் வாழ்வினை வட்டமிடுகின்றன...

இவளே முதுமை என்னும் ஆடையணிந்தால்
முகஞ்சிவந்த மோதல்கள் சங்கமிக்கின்றன....

இவளே மரணத்தை முத்தமிட்டு விட்டால்
மகிழ்ச்சிமலர் செறிந்த மாலைகள் சூட்டப்படுகின்றன...

வாழவைத்தால் வாழலாம் என்பர்
வாழ்க்கையை உணர்ந்த சான்றோர்..,
கோபம் என்னும் மங்கையைக்
குடிவைக்க எண்ணுவோர்
வீழ்ந்திடுவர் என்பதே விசித்திர உண்மை...
© த.கிருத்திகா