...

3 views

அக்கா ❤️தங்கை
ஒரு தாயின் உணர்வுகளை சுமந்த இரு உருவங்கள்,
வளர்ச்சியில் இடைவெளி இருந்தாலும்,
இவளும் அவளும் ஒன்று போல் தான் உருவ
ஜாடையில்....
பெரியவளாய் பிறந்ததால்,
எல்லாம் தனக்கு தான் என்ற பிடிவாதம் எப்போதும் கொண்டவள்,
சிறியவள் நித்தமும்
விட்டுக்கொடுக்கும் நிதானம் உடையவள்....
பெண் பிள்ளைகள் என்பதால் பொத்தி பொத்தி வளர்ப்பது தானே நம் மரபு...
அப்படித்தான் இவர்களும் வளர்க்கப்பட்டார்கள்..
படிப்பில் பெரியவளை விட சிறியவள் கெட்டிக்காரி தான்..
பெரியவளும் படிப்பாளி தான் ஆனால் காதலில் அதைவிட கெட்டிக்காரி...
கண்ணால் பார்த்தவனையே கரம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்,
படிக்கும் வயதில் பெரிதாக படிப்பை பொருட்படுத்தாதவள்...
சிறியவளும் காதலில் விழுந்தவள் தான், ஆனால் அவள் சரியான முன்னோக்கு பாதையை சென்றடைந்த பின்பே காதலை நாடினாள்.
பெரியவளுக்கு ஆசை பட்டது போலவே கண் கண்டவனே கணவனானான்.
வருடங்கள் ஓடியது..
சிறியவள் படிப்பு முடித்து, ஒரு நல்ல வேலையில் அமர்ந்தாள்.
பெரியவளுக்கு அப்போது இரண்டு குழந்தைகள் ஆகி விட்டது.
அப்போது பெரியவள் சிந்திக்கிறாள்,
"தான் எதற்காக படித்தேனென்று"
பெரியவள் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்தாலும் தன்னுடைய
தொழில் நிமித்தமாக எந்த வித முன்னேற்றமும் அடையாதவள்.
சிறியவளுக்கும் ஒரு வழியாக திருமணம் நடந்தேரியது.
ஒரு தாயின் உணர்வுகளை சுமந்த இரு உருவங்கள்,
இன்று இரு குடும்ப உணர்வுகளுக்கிடையே வாழ ஆரம்பித்தது.
குடும்பம் விரிவடைய இருவரும் பக்குவமடைந்தனர்.
பெரியவளுக்கு அப்போது தான் புரிந்தது நாம் வாழும் உலகம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும்,
ஒரு வயது வரை தான் எல்லா உறவுகளும் ஒன்றாக வாழ முடியுமென்று!!!
அக்கா தங்கை என்ன சொல்லி கொண்டாலும்,
அக்கா குடும்பம் வேறுதான்!
தங்கை குடும்பம் வேறுதான்!
வீட்டில் ஒன்றாக உறவாடியா இந்த உறவு,
விடுமுறைக்கு மட்டுமே ஒன்றாக உறவாட முடியும் என்றானது!!!
அக்கா தங்கை உறவின் நிதர்சனம்...





© ❤நான் வாணி ❤