...

7 views

விதையின் வலி...
என்றோ ஓர் நாள்
உன் பார்வைக்கு
தவமிருந்த என் காதல்
விதைக்கு,

உன் விழிகளின்
தரிசனமே
மழை நீராய்
பொழிய

காதல் செடி முளைத்தது,
என் மனதில்..
செடி முளைக்கும் வரையில்
அன்பை பொழிந்த
உன் விழிகள்
இன்று
கண்டும் காணாமல் சென்று விட
காதல் செடி பட்டுப்போய்
விட்டதடி,





© alone