...

4 views

காதலும் கடந்து போனது
அப்பொழுது நான் அறியவில்லை,
அவளை விட்டு செல்கிறேன் என்பதை,
வேண்டாம் என அவளும் செல்ல, நானும் அமைதி கொண்ட நொடிகள் நினைத்து பாக்கும் பொழுதில் தோன்றுகிறது,
வாழ்வின் மொத்தம் இழந்த நிலையில் நான் தனிமை என்னும் வலையில் சிக்கி கொண்டு தவிக்கிறேன் என்பதை,
ஒரு நாளும் அவளை விட்டு பிரியேன் என அவள் இரு விழி பார்த்து கூறிய நொடிகள் விழி முன்னே வந்த செல்ல என்ன செய்ய கண்கள் குளமாக மட்டுமே மாறும் பொழுதில் யாசிக்கிறேன் மீண்டும் ஒரு வரம் வேண்டும். அவளே என்னவளாய் வேண்டும் என.
கல்நெஞ்சகாரி ஆயிற்றே,
அவள் அழுகை எல்லாம் தீர்ந்து போனது போல சிரித்து கொண்டு இருக்கிறாள், அவள் சிரிப்பினை காணும் பொழுதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் அவளின் சிரிப்பில் எண்னை தொலைத்த நொடிகளை ஒவ்வொரு முறை நினைவில் தோன்றி மறைய காதல் செய்ய பாவி நான், கரம் பிடிக்க மறந்து போனது காலம் செய்த சூழ்ச்சியோ.
இந்த தீரா நினைவுகள் என்னோடு இருக்கும் வரையில் யாருக்கும் இடம் இல்லா இதயம் இரும்பாய் மாறி போனதே...
கதைக்கும் நொடிகள் எல்லாம் காணாமல் போனது எப்படி ஏற்கும் என் மனம்...
இங்கே இதயம் என்று ஒன்று இருந்ததை மறந்து கொண்டு மரணித்து கொண்டு இருக்கிறேன்.
கலைந்த மேகம் போல காணாமல் போன என் காதலை என் கற்பனையில் மீட்டெடுக்க...

© அருள்மொழி வேந்தன்