...

3 views

அவளின் அவளதிகாரம்
கார்மேகம் சூழ மேகக்கூட்டங்கள் எல்லாம் வானம் முழுதும் சூழ்ந்து கொண்ட நொடியில் நிலவினை வானில் நான் தேடி பார்க்க, ஏனோ என் விழியில் தென்பாடவில்லை,
மனம் உடைந்து மாடியில் நான் காத்திருக்க முழுமதி பூலோகத்தில் நடந்து வந்ததை கண்டு வியந்த நொடியில் இந்த வரிகள்.
பெண்ணே நீ பெண் தான இல்லை நிலவின் நகலா, மௌனம் கொண்ட வானத்தில் என் விழிகள் தேடிய பொழுதில் காண மதியை சென்னை நகர வீதியில் வரும் பொழுதில் கண்டேன்.
ஒரு முறை இரு முறை பல முறை என் கண்கள் காணாமல் போகும் வரை தேய்த்தும் தோற்று போனேன் உன் விழி அழகில்.
அந்த பிரம்மனும் தோற்று போனானோ உன்னை படைக்கும் பொழுதில் பூலோகத்தில் இருக்கும் ஆண்கள் நெஞ்சம் எல்லாம் பாவம் என்னும் எண்ணாமல் விட்டு விட்டானோ,
கதைகளும் இயலும் இசையும் கவியும் கானா இவளை நான் கண்டேன்.
பெறும் புலவனும் இங்கே இருந்த இவளுக்கும் இயற்றி இருப்பான் அவளதிகாரம் என்னும் பெறும் படைப்பை...
ஏனோ நானும் ஒரு நொடியில் தோற்று போனேன் என் பேனாவும் கலைத்து போனது காரிகை இவளின் கண்களை வர்ணிக்க வார்த்தைகள் தேடி.
இன்னும் இதழும் இமையும் பிறை நெற்றியும் இருக்க.
மொத்தமாய் வீழ்ந்து போனேன் நானும்....எழுத்துவத்தையும் சேர்த்து...
© அருள்மொழி வேந்தன்

Related Stories