...

8 views

உலகே!
நிலம் நீரு நெருப்பு காற்று ஆகாயம் பாக்கனும்
அழகான உலகம் தன்னை உருவாக்கி கொள்ளனும்
தனியாக பலமாக உயிர்களை மிரட்டும்
அவ்வைந்தும் ஒன்றுசேர்ந்தா வாழ்வினை கொடுக்கும்

நிலத்தை தோண்டி ஆழமிட்டு
நிலை குலைய செய்துவிட்டு
பிறப்புறுப்பை அறுத்துவிட்டோம் மண்ணிலே
பச்சிளம் குழந்தைகளை மூடிவிட்டோம் குழியிலே
நந்தினியை நினைத்து அழுவதா - நிலத்தில்
சுர்ஜித்தை மூடி மறைப்பதா

தண்ணீரை தாரை வார்த்து
பன்னாட்டில் ஏலம் விட்டு
ஆறு குளம் ஏரி எல்லாம் அழித்துவிட்டோம்
உயிரைக் கொள்ளும் பானமாய் மாற்றிக் கொண்டோம்
(இனி) கண்ணீரை குடிக்கச் சொல்வதா - கடல்
அலைகளிலே தாகம் தீர்ப்பதா

அமேசானை எரித்துவிட்டு
காற்றுக்கே கொள்ளி வைத்து
நெருப்பென்னும் ஆற்றலை வீணடித்தோம்
சுவாச காற்றுக்கே அரசு வரி விதித்திடுவோம்
தீமை கொளுத்தி குளிர்காய்வதா- இல்லை
கற்பழித்து பெண்ணை எரிப்பதா