...

2 views

ஏழையின் ஏக்கம்
வயதான அம்மா
தாடியை வளர வைத்திருக்கும் அப்பா
கல்யாண வயதில் அக்கா
அரசு கட்டித் தந்த காலனி வீடு
விட்டு விட்டு எரியும் மின் விளக்கு
சல்லடை போல் ஓட்டைகளை சுமந்து நிற்கும் கதவு
எந்த நிமிடமும் விழுந்து விடும் என நினைக்கும் சுவர்
உறவுக்கு ஆள் இருந்தும் உலைக்கு அரிசி இல்லை
வயலில் பருத்தி எடுக்க சென்ற அண்ணன் எப்ப வருவான் என்று
உடுத்த உடை இன்றி வாழ்க்கைக்கு விடை தேடி
வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் என் நிலைமையை
இந்த கவிதையில் புதைக்கிறேன்