...

13 views

பள்ளிக்கூடம்
கதறி நானும் அழுதபடி
பள்ளிக்கூடம் சென்றதுன்டு..
பன்னிரண்டு முடித்து மீண்டும்
அங்கு செல்ல நினைத்ததுன்டு..

நீராறும் என தொடங்கும்
நேரமதில் ஸ்ருதி குறையும்..
கடைசி மணி ஜனகணவில்
மொத்தமாக ஏறி இரையும்..

மையில்லா வேளையிலே
பேனாவும் திணறிடுமே..
நண்பன் தந்த சொட்டு மையில்
வகுப்பெழுதி முடிந்திடுமே..

முதல் மணியை கேட்டும் கூட
மெல்லமாக நகர்ந்ததுன்டு..
கடைசி மணி அடித்தவுடன்
சிதறி ஓடி போவதுண்டு..

ஆசிரியர் பற்பலரை நாம்
கடந்து வந்தாலும்..
சிலர் தந்த நினைவது தான்
இருந்திடுமே எந்நாளும்..

எதிர் பாலை கண்டாலே
ஈர்ப்பு வரும் காலமது..
ஈர்பதையே காதலென
கூறிச்செல்லும் வயதுமது..

மெல்ல மெல்ல மீசையது எட்டி
பார்கும் வேளையிலும்..
பாவாடை சட்டையது
தாவணியாய் போகையிலும்..

தனக்கான ஜோடியதை
தேடிடவே மனம் ஏங்கும்..
தன்னை தானே எல்லாமாய்
எண்ணிக்கொண்டு நடமாடும்..

எல்லாமே மாயையென
உணரும் அந்த நேரம் வரும்..
அப்போது பள்ளி செல்லும்
வாழ்க்கை அதும் முடிந்துவிடும்..

எத்தனையோ காரணத்தால்
பள்ளி அது கசந்தாலும்..
முடியும் அந்த வேளையிலே
துளி நீரது வந்து போகும்..


© பினோய் பிரசாத்