...

1 views

காதல் சுகமானது!!
" ஊரெல்லாம் தேடினேன்
ஒரு இடம் கிடைக்கல!!
கண் காணும் தூரம் யாரும்
அங்கு காணல!!
பசி ஆர வேனுமுன்னு கணி மரம் பார்தேனே!!
பச்ச மரம் காத்திருந்து இப்ப
பட்டு போய் நிக்குதடி!!
பட்டு பூச்சியா திருஞ்சி ஒரு
இடம் உட்காந்தேன்!!
காத்தோட கைப்பிடி கிடைக்கல!
புல் வெளியின் கால் தடம்
கிடைக்கல!!
ஓர் இடம் கிடச்சதுன்னு ஒய்யாரமா உட்காந்தேன்!!
அந்த ஒரு இடமும் மண்
மடி ஆணதடி!!
சுத்தி முத்தி பார்த்தேன் ஜோடி
போட்டு காத்திருக்கு
நான் சுத்தி கொஞ்சம் போடயிலே என் ஜோடி காணலயே!!
பக்கத்துல பார்தேன் பச்ச மரம் நிக்குதடி!!
மரத்து மேனியில கிளி ரெண்டு கொஞ்சுதடி!!
மரத்தடி ஓரத்துல நான் கொஞ்ச!!
எனக்கொரு ஜோடி காணலயே!!
செக்க சிவந்த வானம் ஒன்னு
செவக்காம கூறியது
காலமெல்லாம் கைப்பிடிக்க கருமேகம் உள்ளதுன்னு!!
சிவந்த மேனிய கை பிடிக்க
எனக்கொரு ஜோடி காணலயே!!
காத்து காத்து பூத்திருந்தேன் மனசுல ஒரு கலக்கம்!!
கண் முன்னே வந்ததடி காதல்
எனும் கலங்கரைவிளக்கம்!!
புல் மேல பனி விழுந்தா காதல்
தான்!!
கன்ணிப்பொண்ணு உதட்டோரம் தேன் எடுத்தா காதல்
தான்!!
கட்டில் மேலே போர் நடந்தா காதல் தான்!!
தொட்டிலுலே கேட்கும் தாலாட்டும் காதல் தான்!!
காலை நேரத்து குயிலிசை கேட்டால் காதல் தான்!!
மாலை நேரத்து மயிலாட்டம்
பார்த்தால் காதல் தான்!!
காதல் இல்லாமல் பெரு பார் இல்லை!!
காதல் இல்லாமல் சிறு
உயிரில்லை!!
மோதல் சில வலிகள்
தந்தாலும் காதல் என்றும்
சுகமானது!!

(கவிஞர் வேல்)