...

8 views

சிதறல்
முதல் முறை பார்க்கையில் நாணத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
மோதிரம் மாற்றுகையில் நம்பிக்கைக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
உரையாடுகையில் கூச்சத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
கைகோர்கையில் அன்புக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
முடிச்சுப்போடுகையில் காதலுக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
பக்கம் வருகையில்
அச்சத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
முத்தாய் முத்தமிடுகையில்
காமத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
நாட்களை காலங்கள்
களவாடுகையில்
புன்னகைக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
தருணங்கள் மாறுகையில்
சந்தேகத்துக்குள் ஒளிந்துக் கொண்டேன்...
துரோகங்களை சந்திக்கையில் என் மொத்த உணர்வுகளில் இருந்தும் சிதறி சிதறி சிதறல்களாய் போனேன்....!




© சீதளா செ
#heartbroken #heartsays #reality #life #cheating #feeling #love #tears #faithbroken #writings