...

5 views

கடந்து விடவே நினைக்கிறேன்
எனக்கு தெரியும்
இதோ என்னை நனைக்க
வாசல் வரும் மழை
நிச்சயம் அவனக்கு
முந்தைய நாட்களின்
வெக்கையை பரிசளிக்கக்கூடும்!

உணர்ந்தும் உணராத தொணியில்
மழையை தவிர்த்து
கதவுகளின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது
அவனது பார்வைகளால் நெய்யப்பட்ட
எனது நேசம்!

இந்த மழை இரவுக்கு பின்னான எனது முணகல்களில்
உறுதியாக ஒரு பெயர்
ஒலிக்கக் கூடும்

அது அவனுக்கும் கூட அறிவிக்காத
என்னால் அவனுக்குச் சூட்டப்பட்ட செல்லப்பெயராய் தான் இருக்கும்

உங்கள் காதுகளில் அப்பெயர் விழுந்தால் தயவு செய்து அவனுக்கு கூறிவிடாதீர்கள்

அவனுக்கென ஒரு குடும்பம் அங்கு உண்டு!!
- மதிஒளி