...

3 views

பெண் எனும் சக்தி....!
அச்சிவனின் பாதி பெண்,
இப்புவியில் பாதி பெண்,
ஓடும் நதியெல்லாம் பெண்,
வீசும் காற்றெல்லாம் பெண்,
தாங்கும் நிலம் ஒரு பெண்,
தாங்கிடும் தாயும் ஒரு பெண்...!

பெண்...!
உயிரின் நீட்சி இவள்,
உலகின் சுழற்சி இவள்,
கருவுக்கு காரணம் ஆண் எனினும்
அதை தாங்கி பெற்றிட பெண் தேவை,
உயிருக்கு காரணம் ஆண் எனினும்
அதை உயிர்ப்பித்திட பெண் தேவை...!

பெண்ணைப் போல் ஆணுக்கு பொறுமை இல்லை- ஆகவே
கருவை சுமக்க கருப்பையை கொடுத்தான்!
பெண்மைப்போல் ஆண்மைக்கு சகிப்பு தன்மை இல்லை-ஆகவே பையுடன் பொறுமையும் கொடுத்தான்...!

நாமோ நம்மைச் சுற்றியோ,
உயிர்களோ அதனைச் சுற்றியோ,
எங்கேனும் ஓர் உயிர் பெண்மை இன்றி ஜனித்தது இல்லை...!

பெண் ஒருத்தி இருப்பதினாலயே ஒர் இல்லம் முழுமையடைகிறது,
பெண் ஒருத்தி இருப்பதாலயே ஓர் குடும்பம் விருத்தி அடைகிறது...!

பெண் இல்லா இடம் இல்லை,
பெண் இன்றி யதுவும் இல்லை,
பெண் போல ஆண் இல்லை,
பலருக்கு இது புரிவதில்லை,
புரிந்தோர் மறுப்பதில்லை,
மறுத்தோர் மாந்தர் இல்லை...!

பெண்ணியம் காக்க கண்ணியம் வேண்டும்,
கண்ணியம் பெற நல்மனிதம் வேண்டும்,
நல்மனிதம் பெற நல்வளர்ப்பு வேண்டும்,
நல்வளர்ப்புக்கு ஒரு பெண் மட்டுமே வேண்டும்...!

பெண் இல்லா வாழ்வு முழுமையில்லை,
தன்னில் பாதியாய் பெண் இல்லையேல் அவன் சிவனும் இறைவனில்லை...!

© சிவ ப்ரகாஷ்

@sivapragash #சிவப்ரகாஷ்