...

10 views

பாரதியே வருக!
பாட்டுக்கு பாரதியே!
தமிழ்அன்னைக்கு சாரதியே!
எங்கு நீங்க போனீங்க
எங்களுக்குச் சொல்லுங்க.
வாங்க வாங்க பாரதி
நீங்க இல்லாம பெருகுது சாதி
ஓடி விளையாட
சொன்னீங்க நீங்க
ஓடாமல் விளையாட தினம் சொல்லுறாங்க
மதிப்புக்கல்வி மண்ணுக்குள் போயாச்சு
மதிப்பெண் கல்விக்கு
மதிப்புப் பெரிசாச்சு
ஆசிரியர் இல்லாமலே கல்வி பெருகியாச்சு
குருபக்தியின்றி நற்பண்பு தொலைஞ்சாச்சு
சமத்துவம் பேசும் பொருளாச்சு
சந்தோஷம் தோஷமாய் மாறியாச்சு
சுதந்திரம் ஆடையில் கிடைச்சாச்சு
சுயமரியாதை சுதந்திரமாய் போயாச்சு
பாட்டுக்குப் பாரதியே!
தமிழ்அன்னைக்கு சாரதியே!
எங்கு நீங்க போனீங்க?
எங்களுக்கு சொல்லுங்க
வாங்க வாங்க பாரதி
நீங்க இல்லாம பெருகுது சாதி....





© சரவிபி ரோசிசந்திரா