...

1 views

கசங்கிப்போன காகிதம்!

காதலோடு கதைபேச...
காமத்தோடு குட்டி குட்டிச் சண்டை போட...
கைக்கோர்த்து உறவாட...
கூடலோடு ஊட்டிவிட...
காதோரம் காற்று ஊத...
கண்ணங்கிள்ளி கொஞ்சிட...
சேர்ந்து மழையில் நனைய...
தூக்கத்தில் உனை அணைக்க...
நெற்றி பொட்டில் முத்தமிட...
வழிந்து வழிந்து உன்னை எரிச்சலூட்ட...
செல்ல பொய்கள் சொல்லி
வெட்கம் பட...
உன் மயிரிலைகளை கோதிவிட...
ஆசையில் ஆழ்ந்திட...
காத்திருக்கிறேன்!
என்றெல்லாம் கொட்டி தீர்க்க விழைகிறேன்...
இருந்தும்
அஞ்சி அஞ்சி
ஒருதலை காதலனானேன்...
என் மனமும் என் வரிகளும்
விழுந்து கிடந்த...
கசங்கிப்போன காகிதத்தில்!
© minmini