...

1 views

அவளும் ஒரு கவிதை
எத்தனையோ கவிதைகள் எழுதிய என் பேனா உன்னை மட்டும் விட்டு வைத்தால் குறை படாதோ, மொத்தமாய் ஒரு கூட்டம் சேர்த்து தான் என்னிடம் போர் புரியவே முயல்கிறது காரணம் கேட்டேன், இரு விழி பற்றி வர்ணித்த உனக்கு அவள் விழி பற்றி ஒன்றும் தோன்றவில்லையா என கேட்க திரு திரு வேண முழித்த என்னிடம் மீண்டும் ஒரு கேள்வி வர திகைத்து போனேன்.
பல வரிகள் வரைந்த என்னையே மிரட்டும் வார்த்தைகளிடம் கேட்ட பொழுதில் உன்னை வர்ணிக்கா வார்த்தைகள் எதற்கு நீயும் எதற்கு என பானம் என் மீது பாய்ந்து கொண்டு இருக்க...
ஒரு ஓரமாய் நமட்டு சிரிப்போடு வருகிறது மேலும் ஒரு வார்த்தை கூட்டம்...
போதும் என போராட்டம் நான் செய்து உனக்கென்ன உருவாக்கினேன் ஒரு வரி...
இந்த பூலோகத்தில் நான் கண்ட தேவதைகள் சிலரே ஆனாலும் அதில் நீ மட்டும் என்ன செய்தாய்.
தொலைந்து விட்ட பொக்கிஷம் மீண்டும் கிடைத்ததோ என நான் நினைக்கையில் நில்லாமல் செல்லும் நீரோடை போல செல்வது ஏனோ.
ஒரு மொழி இங்கே மௌனம் கொண்டது,
பல வரிகள் இங்கே ஏக்கம் கொண்டது மீண்டு வராதா இந்த நீல நிலவும்..
மேக கூட்டமாய் நாங்கள்......
© அருள்மொழி வேந்தன்

Related Stories