...

4 views

நெளிந்த கயிறும் அவிழ்ந்த முடிச்சும்
தொட்டுக்கொள்ள
யாருமில்லை
இட்டுச் சென்ற காற்றிலும்
வாடை இல்லை

உமிழ்ந்த தனிமையின்
தாக்கத்தில் நானென்ன
சொல்லுவேன் தேகத்தின்
தோல் தாண்டி
வேட்டையாடும் உணர்ச்சிகளை

வேறுபடுத்த வேர்களாய்
உருவெடுத்த சூழல்களில்
வளர்ந்து முன்னேறுவது
ஆசைகளன்றோ

நா வறண்ட தோரணையில்
நளினம் தேய்ந்த குரலில்
வறுமை நாதமே

அந்துபோன கயிற்றின்
அரை பாதியில் நாட்களும்
மீதமுள்ளதில் எதிர்பார்ப்புகளும்
பிய்ந்து விழப்போவதே
மிச்சமுள்ள வாழ்க்கை

இனி மனம் நொந்து போவதில்
என்ன லாபம்

வாழ்ந்துவிட்டு போ
இங்கே எதுவும் உனதல்ல..
© kamal
#loneliness #Life&Life
@kamala.kamal