...

1 views

பூமி நின்று வானம் புரண்டாள்..?
வாழ வேண்டுமோ?
வழிகெட்ட மனிதனுக்கு
வாழ்க்கையும் வேண்டுமோ?
பூமி நின்று
வானம் புரண்டாள்
புவியோர் புழுவல்
புறமும் அறியும்,
கறியாய் தின்ன
காசு பணம்
கவலையில்லையோ?

கட்டு நோட்டில்
கட்டி பிரளும்
கெட்டிக்கார இனமே
தொட்டில் பிள்ளையில்
கட்டிய கயிற்றில்
எட்டியே பார்த்தாயோ?
துட்டில்தான்
துன்பமில்லையென்று,
அன்றியும்
முட்டிய மார்பே
ஊட்டிய பால் அதை
திட்டியே தீர்த்தாயோ?

ஒட்டகம் போலவே
வட்டுவம் கட்டியே
சேர்கின்ற சில்லறை
விட்டவன் விதியாலே
சட்டென்று போய்விடும்
சிலநேரம் கல்லறை,
எட்டியவன் அறிவிலே
தொட்டிடாது பேராசை
மனம் கெட்டியே
வாழ்பவனுக்கு
மண்ணாங்கட்டியே நிராசை…

தோற்றவன் புலம்பலில்
ஏற்றவன் எஜமானன்
மாற்றமும் மறுநாளே
மரித்தவன் நிலை பாரும்,
விற்றவன் விதிகளில்
விருப்பமும் விலை நிலை
சோற்றுக்குள் சுகமில்லை
சேற்றுக்குள் செல்வம் சேரும்…

எட்டாது எம்கணக்கு
முட்டாள்கள் பார்வையில்
சிட்டாகச் சுற்றிடுதே
சிறு மூளை
செயல் உமக்கு,
வித்தாக விதைத்தவன்
நீ செத்தாக நாடினால்
புவி புற்றாக மாறுமே
புறமேனி சதை நமக்கு…

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ​✍🏾