...

4 views

என் அப்பன் ஈசன் சர்வேஸ்வரன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தான் அவன்
பெண்ணுக்கு முதலிடம் தந்தான் அவன்
என்னப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

நெற்றியில் கந்தனை சுமந்தான் அவன்
சடையில் சந்திரனுக்கு இடம் கொடுத்தான் அவன்
கேட்டதைக் கேட்டபடி கொடுப்பான் அவன்
என் அப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

நந்திக்கு காட்சியும் தந்தான் அவன்
தர்மத்தை தரணியில் நிறுத்துப் அவன்
பற்றற்று இருக்கும் பரிவான் அவன்
என்னப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

பக்திக்கு பதிலாக முக்தி தருபவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பிறப்பில்லா இறப்பில் லா
நாயகன் அவன்
என்னப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

தினந்தோறும் திருவிளையாடல் விளையாடுபவன்
ஞான சம்பந்தருக்கு காட்சி தந்தான் அவன்
தாயாக தந்தையாக திகழ்பவன்
என்னப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

என்னப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

என் அப்பன் ஈசன் சர்வேஸ்வரன்

இது நான் எழுதிய பாட்டு எனக்கு சுருதி சேர்த்து பாட தெரியவில்லை எவராவது திறமையான பாடகர் இருந்தால் இந்தப் பாட்டை சுருதியோடு பாடி ஏதாவது ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
சிவராம்
எல்லாம் சிவமயம்

© Siva