...

2 views

எண்ணத்தின் எல்லையில்....
விடியாத
விளக்கில்
திரியாக
தினம் காலை…

கொடியாகப் படரும்
கொடுமைகள்,
படியாமல் தொடரும்
பகைமைகள்…

நெடியாகவே
நீள்கின்றதே…
நொடியாகவே
வாழ்கின்றதே…

வெடியாக
வெடிக்கவா நான் அதை?
முட்செடியாக
முறிப்பாயோ நீ அதை?

எண்ணத்தில் எரிகின்ற
வண்ணத்து மின்விளக்கை
பண்ணொற்று பார்க்காமல்
கிண்ணத்தில் கேழ்வரகாய்
கிடைப்பதென்று தின்பாயோ?

இறக்கத்தில்
இழிவு கொண்டவனே
இரவு உறக்கத்தில்
ஊனம் கொள்வாயே…

உறவு நெருக்கத்தில்
துறவு கொண்டவனே
உணர்வு தர்க்கத்தில்
உடைந்து செல்வாயே…

நேரத்தை வீணாக்கும்
ஓரத்தில்
உன் படுக்கை,
வீரத்தை ஊணாக்க
தன்மானத்தை
தலை நெருப்பாக்கு…

ஆக்கத்தில்
ஆளப்பிறந்தவனே!
இயக்கத்தில்
இருக்கும் உடலில்
ஏக்கத்தை
ஏற்றிக்கொள்வாயோ?

சாகச சக்திக்கு
சக்களத்தி
சரி என்பாயோ?
போதகன்
நான் அல்லர்
வேதகன்
வேறொருவர்…

போதைக்கு
பிறந்திட்ட
மேதைக்கு
மேளதாளம்,
கோதைக்கோ
அது குடும்பபாரம்…

அடுக்களை
ஆண்கள் வசம்
அசிங்கமென்பாயோ?
பூக்களை
பூகம்பத்தின் புதிரில்
புரிந்து கொள்வாயோ?

தோட்டத்தின்
தோரணையில்
கனிகளை பெறுவாயோ?
பெண் நாட்டத்தின்
பெருமையை ஓட்டத்தில்
ஒழித்து வைப்பாயோ?

பொய்யான புதையலுக்கு
மெய்யாக நடிப்பாயோ?
முரணான அறனுக்கு
முப்பொழுதும் உழைப்பாயோ?

பிணம் தின்னும்
காகிதத்தில்
பணத்தின்
குணம் மதிப்பாயோ?

ஆகாச மாளிகையில்
ஆறடி குழி
அமைப்பையோ?
தேடாத புண்ணியத்தில்
தேவைக்குத் திருடி
இரைப்பாயோ?

மண்ணறைக்குப் பக்கத்தில்
மருத்துவச் செலவைக் குவிப்பாயோ?
மாறாத மரணத்தின் பிடியில்
மனிதனாக இறப்பாயோ?

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #Tamil quotes

© aV ​✍🏾