...

10 views

பெண் அவள்
விந்தை உலகமென ஒன்றை கண்டேன்
அதில் மானுட பிறவியெனும் சமூகம் தென்பட்டது !!

வஞ்ச புகழ்ச்சிக்கும்
பொன் பொருளுக்கும்
உடல் சுகத்துக்கும்
எதையும் செய்திடும் குணங்கள் கண்டேன் !!

தூய்மையான காற்றும்மில்லை
வாய்மையும் இல்லை !!

பெண்ணே நீ வீழ்ந்தாள்
உன் அங்கம் தீண்டத்துடிக்கும்
கண்களும்
இடை தழுவத்துடிக்கும் கைகளும்
தொட்டணைத்து யோனியில்
தன் ஆண்மை புணர துடித்திடும்
காமுகர்கள் சூழ் உலகமிது !!

நல்லவர்கலென நீ பேச
வல்லவர்களாய் வலைவீசும்
கண்கள் உண்டு
சுதாரித்துக்கொள்ளடி மறவாதே !!

தனித்து நில்
துணிந்து செல்
எதிர்த்து பழகு
கர்வம் கொள்
பாரதியின் புதல்வி நீயென !!

அச்சம் தவிர்
நாணச் செருக்கோடு
உலகை பார்
உன் பிடித்தம் எதுவோ
அதனை முனைந்து
வெற்றிகொள் கலங்காதே !!

ஓர்நாள் நீயும் உச்சம் தொடுவாய்
உனை தீண்டத்துடித்த கைகள்
அன்று இருகரம் கூப்பி வணங்கி
தலைகுனியும் கர்வம் கொண்டு மடி..

#WritcoPoemChallenge
#WomensDay
Her eyes gleamed with the light 
Of her inner strength,
She had walked miles,
Not worried about the length,

© மௌனன்