மணவிழா வாழ்த்துகள் நட்பே...
மணவிழா வாழ்த்துகள் நட்பே...💐
( முன்கூட்டிய வாழ்த்து)
வாழ்க நிறைவுடன்
நிறைய அன்புடனும் இருவரும்....
இனிமேல் உனக்கென பொறுப்புகள் கூடும்....
எதுவாயினும் உனக்கான சுதந்திரத்தை எவருக்காகவும் விட்டுத் தராதே....
முடிந்தவரை உனக்கென ஒரு வேலைக்குச் சென்று உன்னை நீயே அடையாளப்படுத்திக் கொள்! இச்சமூகத்தில்!
உன் அறிவும் தெளிவும் பொருளாதாரச் சுதந்திரமுமே
உனக்கு எப்போதும் பக்க பலமாக அமையும் என்பதை எப்போதும் மறவாதே!
மிக முக்கியமாக உன்னுள் இருக்கும் இந்தக் கலகலப்புச் சிரிப்பையும் கவலை இல்லா முகத்தையும் உருக்குலைக்கும் விதமாக எது நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாதே!
எப்போதும் நீ நீயாகவே இரு!
சிறிது நேரமேனும் உனக்காக ஒதுக்கிக் கொள் ! சிரித்து மகிழ்! சிந்தனை செய்! சிறாராகிப் போ! அந்த சிற்றெறும்போடு விளையாடு! இப்படி உனக்கு எது பிடித்ததோ அதைச் செய்!
கலியாணம் என்பது வாழ்க்கையின் அடுத்த கட்டமே தவிர உன்னைத் தடுத்து நிறுத்தும் கடிவாளமல்ல!
உன் அனைத்து உறவுகளையும் அன்பால் உபசரித்து அறவழியில் பொருளீட்டி ஆனந்தமாக வாழ்!
உன் இணையேற்பு விழாவில் நான் இல்லாமல் இருந்தாலும் என் இதயம் முழுவதும் நீ தான் நிறைந்திருப்பாய்!
உடுக்கை இழந்தவன் கை போல என் இடுக்கண் களைந்த நட்பு நீ!
அவ்வப்போது
எத்தனையோ உறவுகள் வந்து போனதுண்டு ஆனால் நீ எப்போதும் என்னுடன் நின்றவள் நிற்பவள் நிலைத்தவள் என்னை...