...

3 views

புத்தாண்டு கவிதை
எதுவும் என்னால் முடியும் என்று
இந்நாள் பிறக்கட்டும்
இலாதது எதுவுமில்லை என்று
மனதில் நம்பிக்கை மலரட்டும்

சிறகினை விரித்து
எழுந்து வா
சாதனைகளை அடைந்து
மகிழ்ந்திட வா

இத்தனை ஆண்டுகள்
நீ தோற்று இருந்தாலும்
இந்தாண்டு உன்னை
வெற்றி பாதையில் அழைத்து செல்லட்டும்

விதி விளையாடுகிறது என்று
எண்ணி விடாதே
விதியினை விரட்டியடிக்கும் ஆயுதம்
உன் தன்னம்பிக்கை மறந்துவிடாதே

உன் விருப்பம் எதுவோ
அதனோடு மனதை செலுத்து
கனவு உலகில் கண்மூடி
வாழ்வதை நிறுத்து

வெற்றியெனும் தோழனுக்கு
முயற்சியெனும் மரியாதையை செலுத்து
நல்ல காலம் பிறக்குது உனக்கு
இனி கவலைகள் மனதில் எதற்கு

புத்தாண்டு மலர்கையில்
புது இலக்கினை தொடங்கிடு
புன்னகையோடோ வாழ்ந்திட
மனதை தூயதாய் வைத்தியிரு

சிறந்ததும் நல்லதும்
உன் வாழ்வில் நடந்தேறட்டும்
உனது திறமை
உலக மேடையில் அரங்கேறட்டும்

புன்னகை பூத்திடு
புது ஆண்டை வணங்கிடு
புது வாழ்வை தொடங்கிடு
புது இலக்கோடு படையெடு.
-சங்கத்தமிழன்