தமிழ் மகள் ❤️
நான் அடுக்கிய வார்த்தைகள் அவளுக்கு வர்ணம் பூசி உருவம் அளித்தது
மெல்லிசை வார்த்தை மௌனம் சேர்க்க துள்ளிசை ஒலியில் புன்னகை செய்தாள்
என் கை தவறிய ஆயுத எழுத்தோ புருவமானது
அதை பார்த்த மெய்யெழுத்தும் பொறாமை கொண்டது
பொறாமையின் உச்சமோ என்னவோ தெரியவில்லை
அவளுக்கு நான் கண்ணாக மட்டுமே செல்வேன் என்றது
அதைப்பார்த்த இடையினமும் இடையில் தஞ்சம் புக
சட்டென்று மெல்லினமும் வல்லினத்தை முட்டி மோதி பாதத்தில் அமர்ந்து கொண்டது
செய்வதறியாத வல்லினமோ கொலுசில் ஒளிந்து கொண்டது
உயிரும் மெய்யும் சேர்ந்தே அவள் சிலையானாள்
அந்த சிலைக்கு நானே சிற்ப்பியும் ஆனேன்.......😘
© Iy Thamizhanda