...

5 views

என்னவன்
என் வாழ்வில் வந்த அதிர்ஷ்டம் அவன்
என் ஒவ்வொரு நாளின் மகிழ்ச்சியாய் கிடைத்த பொக்கிஷம் அவன்
விழி காண தெகிட்டா ஓவியம் அவன்
அள்ள அள்ள குறையா அமுதம் அவன்
நான் கேட்காது என்னிடம் வந்த வரம் அவன்
மீண்டும் மீண்டும் நனைய பிடிக்கும் வான் மழை அவன்
மனதின் காயத்திற்கு மருந்தாகும் இதம் அவன்
என் ஒவ்வொரு செயலின் தொடக்கம் அவன்
என்றும் மாறா அன்பு காதலன் அவன்