வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
மேகம் திரண்டுவர வெண்முகில்கள் வட்டமிட
கண்ணாளன் உனைக் காண உள்ளம் பூத்ததா
கண்ணோடு கதை பேசி வாசம் வீசுதா
நினைவுகள் சிரிக்குதம்மா
கனவுகள் பிறக்குதம்மா
என்னமோ எனக்குள் இன்பங்கள் பொங்குதம்மா
மேகம் திரண்டுவர வெண்முகில்கள் வட்டமிட
கண்ணாளன் உனைக் காண உள்ளம் பூத்ததா
கண்ணோடு கதை பேசி வாசம் வீசுதா
நெஞ்சுக்குள்ள காதல்
நேசம் கொண்ட தேடல்
நேரில் கண்ட ஓதல்
அதில் மையல் கொண்ட சாடல்
வெறும் பொய்யில் வந்த ஊடல்
பூக்கள் பூக்கும் மாலை
பொன் மலரும் வேளை
உனை பார்த்திருக்கும் நாளை
எண்ணி வெட்கம் கொண்ட சோலை
என்னை சொக்க வைத்த காளை
ஆவாரம் பூப்போல அழகானவன்
ஆகாயம் மனம் போல உயர்வானவன்
தேனாக கதை பேசும் இனிப்பானவன்
தேயாத நிலவாக உருவானவன்
தட்பமா நுட்பமா ...
கண்ணாளன் உனைக் காண உள்ளம் பூத்ததா
கண்ணோடு கதை பேசி வாசம் வீசுதா
நினைவுகள் சிரிக்குதம்மா
கனவுகள் பிறக்குதம்மா
என்னமோ எனக்குள் இன்பங்கள் பொங்குதம்மா
மேகம் திரண்டுவர வெண்முகில்கள் வட்டமிட
கண்ணாளன் உனைக் காண உள்ளம் பூத்ததா
கண்ணோடு கதை பேசி வாசம் வீசுதா
நெஞ்சுக்குள்ள காதல்
நேசம் கொண்ட தேடல்
நேரில் கண்ட ஓதல்
அதில் மையல் கொண்ட சாடல்
வெறும் பொய்யில் வந்த ஊடல்
பூக்கள் பூக்கும் மாலை
பொன் மலரும் வேளை
உனை பார்த்திருக்கும் நாளை
எண்ணி வெட்கம் கொண்ட சோலை
என்னை சொக்க வைத்த காளை
ஆவாரம் பூப்போல அழகானவன்
ஆகாயம் மனம் போல உயர்வானவன்
தேனாக கதை பேசும் இனிப்பானவன்
தேயாத நிலவாக உருவானவன்
தட்பமா நுட்பமா ...