...

13 views

முதல் பார்வை
@ kohila3556
Meera Aathi


பார்த்த பரவசமாம்
விழிகளும் வழிவிட்டது
என் இதயத்திற்குள்
என்னவனின் நிழலை...

நெருங்கிய பொழுதில்
நடுங்கிய விரல்கள்
நீடித்துப் பிடித்தன
நெகிழ்ந்த மனதை...

கடந்ததும் கண்டேன்
கடிகார முள்ளை
காத்திருந்து காணலாம்
கண்ணீரின் வேகத்தை...

திரும்பிய அவன்
துடித்துக் கண்டால்
தோல்வி கடந்து
தாவிக் கொள்வேன்.....