...

4 views

சூறாவளி...
வானம் வசப்பட்டாலும்
நிலவு , நீ
வசப்படவில்லை...

தென்றல் வீசிய போதும்
என் மனதில் புயலே
வீசியது‌..

நிலவு என்று நெருங்கி வந்தேன்...
சூரியனாக
தொலைதூரத்தில் இருந்தே
சுட்டெரிக்கிறாய்..

காணாமல் தவறவிட்ட
தருணங்கள்
இனி வாழ்வில் வருமா..?

புயலாக அலைகழித்து
தென்றலாய்
மாறிய போதும்

ஏனோ தெரியவில்லை
என் காதல் ,
என்னை
சூறாவளியாக
சுழற்றியடிக்கிறது...!

© alone