...

4 views

ப்ரியமான காதலிக்கு💌
நீ எனக்காக அங்கு காத்திருக்க,
நான் உனக்காக இங்கு காத்திருக்கிறேன்.

உன்னை நினைக்கும் நொடிகள் நானிங்கு நலமே..
உன் நினைவில் வாழும் நானொரு சடலமே..

நமக்கு இடையே மாட்டி கொண்ட காதல் ஒரு ஏமாளி...
அதையும் கொல்ல துடிக்கும் கொரோனா ஒரு கோமாளி..

பாதையறியாமல் நின்ற எனக்கு, ஒரு பாவத்தை செலுத்தி விட்டு சென்றாய்.

உன் மூச்சுக் காற்று என்னுள் வரும்முன், காற்றோடு காற்றாய் கொரோனா எனக்குள் கலந்து விட்டது.

ஒரு பக்கம் நீ என் இதயத்தை தாக்குகிறாய்...
மறுபக்கம் கொரோனா என் நுரையீரலை தாக்கிறது...

போதும், நீயும் கொரோனாவும் ஒன்று
நான் இதிலிருந்து விடைபெறுவது என்று.

நீ வெளிநாடு செல்ல போகிறாயா....
நான் உன்னை விட வெகுதாரம் போ போகிறேன்.

உன் முகத்தில் முழிக்க கூடாது என்பதற்கு மாஸ்கும்
உன் முன்னே நெருங்க கூடாது என்பதற்கு சானிடைசரும் கூட இருக்கிறது.

தனியாய் சுற்றி திரிந்த எனக்கும் இங்கு ஒரு தனி அறை.....எல்லாம் தளர்ந்தாலும் மனம் மட்டும் மீளாதொரு சிதைந்த நிலையில்....

வேண்டாம் எனக்கு இந்த வாழ்கை வேண்டாம்.
© Muthu