...

2 views

Tamil New Year Greetings
தமிழ் புத்தாண்டு வாழ்த்து

பதற்றம்.....கொரோனா பதற்றம்
பதற்றம் -அரசியல் பதற்றம்
பதற்றம் -தேர்தல் பதற்றம்
பதற்றம்-சூழல் பதற்றம்
பதற்றம்-பள்ளி தேர்வு பதற்றம்
இப்படி பதற்றத்திற்குமேல்
பதற்றத்தில்
பதற்றமில்லாமல்
பாங்காய்
தமிழ் நெ‌‍ஞ்சங்களை
நெஞ்சோடு நெஞ்சு சேர்க்க
நெஞ்சமாய் வந்துதித்த
தமிழ் புத்தாண்டே வருக வருக
என வரவேற்கிறேன்.
உன் இவ்வருடம் நல் வரவாகட்டும்
உன்னுடன் கொரோனாவும்
இருப்பதால்
உலகத்தில் பதற்றத்திற்குமேல்
பதற்றமாயிருக்க
உன் வரவு
பதற்றமில்லாமல் பாதக
கொரோனாவை கொன்று
இவ்வாண்டை நல்லதாக்குவோம்

தேசமும் உலகும் இரண்டல்ல
ஜாதியும் மதமும் வேண்டென்பேன்
மனிதமும் நட்பும் வேண்டும் ,
வேண்டும் வேண்டும்
அன்பும் வேண்டும்
நூற்றி முப்பது கோடி
மக்களின் உறவும் வேண்டும்
உலக மக்களின் உதவியும்
உழைப்புடன் நாமும் ஒன்றாக
இக்கோரானாவை வெல்வோம்

கஞ்சிக்கு கெஞ்சாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொண்டதை உண்டு மகிழ்வோம்
கொரானாவை வெல்வோம்
இலவசத்தை வெறுத்து
இல்லாமையை வேரறுப்போம்
தேசத்தையும் காப்போம்
அன்பை பரிமாறுவோம் .

இத்தமிழ் புத்தாண்டு
கொடூர கொரோனாவை
கொன்று குவலயத்தில்
நல் மழையை தந்து
ஞாலத்திற்கும் பொருள் தந்து
மக்களுக்கு வாழ்வளிக்கின்ற
ஆண்டாக திகழ
வாழ்த்துகின்றேன்.

படிக்கல்