...

11 views

காதல்!!!
பார்த்துப் பேசிய
நிமிடங்கள்
குறைவுதான்
என்றாலும்,
பல வருடம்
பழகியது போல்
ஒரு
உணர்வு.

பசைபோல்
ஒட்டிக்கொண்டது
உன்
நினைவுகள்!

பரவசமான
உணர்வு
உள்ளுக்குள்ளே
பாய!

என்னைச்
சுற்றி
இருப்பவற்றை
மறந்தேன்
என்னையும்
நான்
மறந்தேன்!

ஏன் இந்த
மாற்றம்
என்ற கேள்வி
எனக்குள்ளே!
ஆனால்,
விடை ஏனோ
தெரியவில்லை.
ஆனாலும்,
ஒருவிதமான
சுகமான
உணர்வு!

எனைத் தீண்டிய
மனமே
இதுதான்
அதுவோ!!!
© Rajalakshmi Iyyappan