...

14 views

மீண்டும் காதலிப்பதா
மீண்டும் ஒரு முறை காதல் செய்ய நெஞ்சம் என்னும் சதையில் ஈரம் இல்லை.
குளமாய் இருந்த கண்கள் எப்பொழுதோ வற்றி விட்டது,
கானல் நீர் கூட தெரியா என் விழிகள் மீண்டும் ஒரு முறை காதல் செய்ய மறுக்கிறது,
ஒரு முறை உடைந்த இதயம் மீண்டும் ஒரு முறை உடைந்தால் மீண்டும் ஒரு ஜனனம் கூட வேண்டாம் என எண்ணம் நிறைந்து இருக்க.
ஏனோ அவள் மீது சிறு காதல் எட்டி தான் பார்க்கிறது,
எப்படியும் சேர முடியாது என தெரிந்த என் வாழ்வில் மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்.
பல முறை உடல் கிழிந்து குருதி தெளித்து, வலி எல்லாம் மறந்து ஜடம் போல் இருக்கும் என்னை பார்த்து மீண்டும் காதல் செய் என காலம் கூறுகிறது.
அவள் மீது மீண்டும் காதல் கொண்டு சேர முடியாத நிலை அறிந்து வாழ்வதற்கு,
இப்பொழுதே மரணம் வந்தால் அள்ளி அணைத்து கொள்ள தான் ஆசை படுகிறது நெஞ்சம்.

© அருள்மொழி வேந்தன்

Related Stories