...

8 views

தேடல்...
தினமும் காலை தொடங்குகிறது இந்த தேடல்...
சில நிமிடங்கள் தனிமையில் தத்தளிக்கிறது இந்த தேடல்...
சில மனிதர்களிடம் சொல்லத் துடிக்கிறது இந்த தேடல்...
சொல்ல வார்தையின்றி
கண்ணீரையும் மறைக்க முயல்கிறது இந்த தேடல்...
எல்லாம் இருந்தும் எதற்காக இந்த தேடல்...
விடை தெரியாமல் திகைக்கிறது இந்த தேடல்...
எதிரில் இருந்தும் காண முடியாமல் தேடல்...
கைகளில் இருந்தும் உணர முடியாமல் தேடல்...
யாராலும் புரிந்து கொள்ள முடியா இந்த தேடல்...
இரவுகள் மட்டுமே துனையெனக் கொண்ட என் தேடல்...
_AJ

© All Rights Reserved