...

9 views

தளிரும் அச்சமும்
கருவறையில்
நீர் கோர்த்து
பூ திரண்டு
சுவர் கழிந்த இளம் பிஞ்சு

பூமி தன்னில் சுமக்க
தன்னிலை
மாறா தாய்மை உதிரம் வெண்மையாக்கி வளரும் சேய்

பிஞ்சு மனதையும் உடலையும் கனியென காம விழிகள் ஆராய்ந்திட

அறியா வயதில்
அழுகுரல் உதிரம் சிந்தச் சிந்த இறந்து
செந்நீர் குறுதி ஆறாய் ஓடியது யாருமில்லா ஊமையாய் நின்ற காட்டு புதருக்குள்

கொடூரம்
பிழைத்து வேறு திசை தேடிச் செல்ல பச்சிளம் தளிர் பூமிக்கு இரையானது

ஈன்றவள்
கண்ணீரும் கதறலுமாய்
தொண்டை குழி கிழிய
ஓலமிட்டு மூளையில் மரணித்து கிடந்தாள்

சமூக போராளிகள்
வேசி
வேடமிட்டு விளம்பர போரிடல் செய்து
நிதி சுளை உண்டு
ஆனந்த கூத்தாடி வாழும் அற்ப உலகில்

தான்
அஞ்சி நடுங்கி தளிர்
வளர்க்கும் கூட்டமும்
கடந்து செல்கிறது

விழியோரம்
மாற்றம் காணுமோ
இவ் உலகமென ஏக்கமாய் நாளும்..!!

© மௌனன்