...

9 views

குழந்தையாய் இல்லாத குழந்தை பருவம்
ஆம்... என் குழந்தை பருவம் குழந்தைகள் எப்படி இருக்கும் என்று அறியாமலேயே வளர்ந்த பருவம்...
காரணம்
வீட்டின் மூத்த பெண் பிள்ளை ஆனேனாம். ஒன்றரை வயதில் அக்கா ஆக நானா கேட்டேன் ஏதேனும் விரும்பி மனதில் நினைத்தாலே அக்கா ஆகிட்ட அடம்பிடிக்க கூடாது என்று அடக்கப்பட்டேன்...
பக்கத்து வீட்டு பத்து வயது பெண்ணை சுட்டிக் காட்டி அங்க பாரு அவ எவ்வளவு சமத்து... நீயும் ஏன் அப்படி இல்லை என ஒப்பிடப் பட்டேன்...
பெற்றவர்களை கேட்கிறேன் நீங்கள் பிள்ளைகளை ஒப்பிடுவதை போல பிள்ளைகள் உங்களை அடுத்தவரோடு ஒப்பிட்டால் நீங்கள் தலை தொங்கி போவீர்கள்...
அம்மா வேலைக்கு போக அக்கா இரண்டாம் அன்னை ஆனேன் ஆனால் அக்காவுக்கு அம்மா???
ஆசையாக ஒரு பொம்மை அணைத்து பிடித்தாலும் பிடுங்கப் பட்டேன்
நீ என்ன குழந்தையா எனக் கேட்டு...
குழந்தையிடம் நீ என்ன குழந்தையா என
குழந்தை தன கேள்விகள் கேட்காதீர்கள் 🙏#ChildrensDay
#Deepikapandiarajan_quotes
#varunavi
© varunavi