...

1 views

மருதாணியும் மாயவளும்
செந்நிற காலை சூரியன் மெல்ல வான் வர அதிகாலை கண் விழித்த தாரகை தனியே கையில் இலை சூழ்ந்து இடை அசைந்து நடந்து வருகையில் வான் மேகம் முதல் நில மரம் வரை அவள் நடையில் தன்னை மறந்து இருக்க.
கையில் வைத்திருந்த மருதாணி இலையும் இவள் வசம் தஞ்சம் அடைந்தேன் என பெருமை கொள்ள.
யார் அந்த அழகி யோ!
மாயவள் அவள் இரு விழி பார்வையில் ஒரு நொடியில் யாவும் அவள் வசம் இருக்க,
விரல் அசைவில் பூலோகம் அவள் திசை திரும்ப இதழ் பிரித்து இசை மொழி அவள் பேச காண குயிலும் பொறாமை கொண்டதோ?,
காதோடு ஊஞ்சல் ஆடும் காதணியும் கவிதை சொல்லத்தான் துடிக்கிறதோ,
நாசி விடும் மூச்சி காற்றில் மொத்தமாய் அவள் பக்கம் நான் செல்ல, மௌனம் கொண்ட மங்கையிடம் மனம் பறிகொடுத்த நொடியில் நானும் ஆனேன் சிலையாய்,
இரு கரம் சிவக்க அரைத்த மருதாணியும் மங்கை அவள் தூண் சாய்ந்து கரம் முழுதும் வர்ணம் தீட்ட திகைத்து போனதோ மற்ற செடிகள்,
நேரம் செல்ல செல்ல மங்கை மனதின் காதல் கொண்டு இரு கரம் சிவந்து அந்த சூரியனும் தோற்று தான் போனதோ அவள் கையில் வைத்த மருதாணி சிவந்து போனதில்.
மௌனம் தீட்டிய ஓவியம் மனதில் கொண்ட காதல் கீதத்தின் பகுதியாய்......

© அருள்மொழி வேந்தன்