...

13 views

தெரியாதவர்களுக்கு தெரியாது !

பெண் விளக்கு மாதிரி !

ஆண் விளக்குத் திரி மாதிரி !

இவர்கள் இருவரையும் இணைக்கும் ,

இல்லறம் ஒளி மாதிரி !

அவள் ஒரு மாதிரி !

அவன் ஒரு மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

வாழும் வாழ்க்கை வேறு மாதிரி ?

சொல்லப்போனால்,

அவள் கவிதை மாதிரி !

அவன் கணவன் மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

ஒழுகும் ஒழுக்கம் -

ஒழுக்கம் மாதிரி !

காலம் போகின்ற போக்கில் ,

அவள் ஒரு காளான் மாதிரி !

அவன் ஒரு ஓணான் மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

ஒருவர்-மற்றவரின் குறைகளை ,

ஏற்கும் பாங்கு சுகம் மாதிரி !

அந்த வகையில் ,

அவள் ஒரு மணி மாதிரி !

அவன் ஒரு கயிறு மாதிரி !

இவர்கள் இருவரும் இணைந்து ,

கல்யாணம் இல்லாமல் இல்லறத்தில் ,

வாழ அனுமதித்தவர்கள் ,

மேதைகள் மாதிரி !

எல்லாக் கூத்தும் காண விதி - விதித்து விட்டது !

அந்த வகையில் ,

நான் தூரத்து ஊர்க்காரன்

மாதிரி !

நீ என்ன மாதிரி !

© s lucas