...

4 views

இருளில் வாழ்பவன்
அவனுக்கு உணவளித்த கைகள்.
அவனை பாதுகாத்த பிரம்பு பிடித்த கைகள். அவன் துணியை துவைத்த கைகள்.
அவன் காலணி தைத்த கைகள்.
அவன் நடக்க தடம் செய்த கைகள்.
அவன் இடத்தை சுத்தம் செய்த கைகள்.
அவன் அசுத்தத்தை சுத்தம் செய்த கைகள். அவனுக்காய் வாழ்ந்த கைகள்.
அவனுக்காய் உயிர் கொடுக்கும் கைகள்.
அவன் கைகள் தொழும் மேல் சாதி கடவுளைத் வாய்ப்பில்லை என் கைகளுக்கோ!
அவன் வெள்ளைச் சட்டையில் ஒருநாளும் கலங்கம் இல்லை என்கிறான்.
ஆனால் அவன் கழிவுநீக்கிய நானோ கலங்கத்தின் உருவமாய் நிற்கிறேன்.
என் வீட்டுப் பெண்ணை இரகசியமாக தீண்ட எண்ணும் அவன் வக்கிர மனதுக்கோ நான் மட்டும் தீண்டத்தகாதவன் ஆகிவிட்டேன்.
பிறப்பால், தொழிலால், வீட்டில், வெளியில் அவன் இருக்கும் எவ்விடமும்.
© manjupriya❣️

Related Stories