...

7 views

அந்தரங்கம்
வெளியில் தெரியா
உடல் போல...
பலருக்கும் காட்டா
முகங்கள் இருக்கோ...?
ரகசியம் என்று ஒளித்து வைத்து...
உள்ளுக்குள் புழுங்கும்
மனங்கள் உண்டோ...?
சிதறி கிடக்கும் நினைவுகளுக்கு கதறி அழும்
குரல் இருக்குமோ...?
வாடாமலே காட்டிக்கொள்ள
பொய்கள் என்ற முகமூடிகள் வேண்டியிருக்குமா....?
வலிகளை வெளிக் காட்டாமல் இருக்க...
பகட்டயும் ஆடம்பரத்தையும்
அல்லி பூசிக்
கொள்கின்றனறோ...?
சிரிக்கும் சிரிப்பில் இல்லை உண்மைகள்...
வழியும் விழிகள் சொல்கிறது....
மெய்க்கு மட்டும் அல்ல....
சுயத்தினுள்ளும் இருக்கிறது பற்பல அந்தரங்கங்கள்!

© minmini