...

21 views

அன்பின் பிதற்றல் மொழி
எல்லா
நேரங்களிலும்
மௌனங்கள் பேசுவதில்லை

எப்பொழுதும்
அன்பின்
பிதற்றல்கள் வெளிபடுவதில்லை

வலிகள்
அழுவதில்லை அவைகள்
பெருங் கூச்சலிட்டு சிரிக்கிறது

பயணங்கள்
ஒருபொழுதும்
ஓய்வதில்லை ஓய்வளிக்கிறார்கள்

கனவுகள்
தோன்றுவதில்லை கற்பனை செய்துகொள்கிறார்கள்

மனம்
ஒருபோதும்
வருந்தவில்லை
ஆசைகளை நிரப்பி உருவாக்குகிறார்கள்

தேடலுக்கு
முற்றுப்புள்ளிகள் ஏதுமிருப்பதில்லை
ஒருகட்டத்தில்
தவறாக தொலைந்து போகிறார்கள்

முயற்சிகள்
புதுப்பிக்கபடுகிறது
ஆனால் காகித தாளே அதை அனுமானிக்கிறது

சிந்தனைகள்
முடிவிலி போலானது
சில மேதாவிகளால் மழுங்கடிக்க படுகிறது

விழிகள்/செவிகள்
உறங்கிக் கொண்டே தான் இருக்கிறது
எதிர்பார்ப்புகள் நீளாத வரை

நா
அதிகம் பேச விரும்புவதில்லை
வார்த்தைகளே
இனிப்புச் சுவையூட்டி தூண்டிவிடுகிறது

விரல்களுக்கு
ஒய்வென்பதே தரப்படுவதில்லை
மேலுள்ள அனைத்தும் தூண்டப்படுவதால் எழுதிக்கொண்டே இருந்துவிட

அன்பின் பிதற்றலாய்
எழுதுகோலின் உணர்வுகளாய்
வானிற்கு இன்றைய பௌர்ணமி ஒளியாய்
மௌனனின் மௌன கிறுக்கல்கள்..!!

💕


© மௌனன்