...

4 views

பெண்....✍🏾
புது உறவு
புது வாழ்க்கை
புது அன்பு
புது கடமை
புது பொறுப்புகள்
புது உணர்வுகள்
புது மாற்றங்கள்
புகுந்த வீடு
இப்படி எத்தனை புதுசு
ஒரு பெண்ணுக்கு......

இத்தனை நாளாய்
பாவாடை சட்டை
போட்டுக்கொண்டு
சவுரியத்திற்குச் சுற்றியவள்....
இன்று திடீரென புடவை
புதுப் புது சம்பிரதாயங்கள்......

வேலைக்குப் போகும் போது கூட ஆறு மணிக்கு அலாரம்
வைத்தாலும் அம்மா வந்து
ஆறேழு சத்தம் போட்டால் தான் தூக்கமே தெளியும்.....

ஆனால் இன்று யாரும் எழுப்பாமல்
நாலு மணிக்கே நாமெங்கேனும்
மறந்து உறங்கி விட்டோமோ
என்று தானாகவே பதட்டத்தில் எழுந்து கொள்கிறாள்.....

ஞாயிற்றுக்கிழமை கூட
தான் சாப்பிட்ட கப்பை நீ வந்து கழுவுமா
என்று சொன்னவள் இன்று
ஒரு தொட்டிப் பாத்திரத்தையும்
அவளே கழுவி எடுத்து வைக்கிறாள்.....

அன்றெல்லாம் என்ன வேண்டும் என்ன வேண்டும்
என அம்மா கேட்டுக் கேட்டுச்...