...

0 views

ஆங்கிலப் பெண்ணே வருக
ஆங்கில பெண்ணே வருக
அளவில்லா இன்பம் தருக
இல்லமெங்கும் புன்னகை பொங்க
அருளாசி எல்லோருக்கும் தருக!

எல்லோரும் நலமுடனும்
எல்லாம் வளமுடனும்
எந்நாளும் வாழ்ந்திட
இந்நன்னாளில் வாழ்த்திடுக!

பெண்ணே - நீ
நல்லவள் எனும் பெயரெடுக்க
நன்மைகளை மட்டும் தந்தடுக
தீய்மைகளுக்கு இடம்மளிக்காமல்
புதுபுது நோய்களுக்கு வழிவிடாமல் காத்திடுக!

சனவரி முதல் நாளாம் - அது
உமக்கு புதுநாளாம் - நீ
புது அகவை காணும் நன்னாளாம்
புதிதாய் மலரொன்று அரும்பும் நாளாம்,

கரங்கள் இரண்டினை குவித்து
மெல்லிய குரலோசை எழுப்பி
வாழ்த்துகள் சொல்லுகிறோம்
நீ பிறக்கின்ற இந்நாளில்
வாழ்த்துகள் சொல்லுகிறோம்

உந்தன் வருகையினாலே
இனி வசந்த காலமே பூமியிலே
உலகம் இயங்கும் அமைதி வழியினிலே
மனிதர் மகிழ்வர் நோயற்ற வாழ்வினிலே,

மும்மாரி மண்ணில் பொழியனும்
எங்கும் இயற்கை செழிக்கனும்
மண்ணின் உயிரிகள் நலமுடன் வாழனும்
உழைப்போர் வாழ்க்கைத்தரம் உயரனும்

புதிதாய் பிறப்பவளே
உன்னை வாழ்த்தி வரவேற்கின்றோம்
எங்களை பொறுப்புடன்
காப்பது உனது கடமை என்கின்றோம்
எல்லாம் நலமாய் அமைந்திடவே
உன்னை கையெடுத்து வணங்குகிறோம்
வருக வளம் தருக.
-சங்கத்தமிழன்