...

3 views

உன் நினைவே போதும்
ஏதேனும் ஒன்றை மறந்து விட
உன் நினைவே போதும்
என்னவனே ....
விதையாய் விழுந்து ஆலமரமாய் வளர்ந்த உன் நினைவே போதுமடா
என்னையும் மறந்து உன்னுள்
புதைந்துடுவேன்.....
யார் என்ன சொன்னாலும் உன்னோடு ஒன்றிப்போன என் எண்ணங்களில் மாற்றமில்லை
ஆயிரம் பேருக்கு மத்தியிலே நீ
நின்றாலும் கண் மூடி உன் கரம் பிடிப்பேனடா என் உயிரானவனே....
அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசிடும் உறவுகளுக்கு மத்தியிலே அகமும் புறமும் என் நலன் எண்ணி பேசும் மன்னவனே...
விழியில் கைது செய்து உன்னுள் என்னை வைத்து பாதுக்காக்கும்
என் கண்ணாளனே.....
நீல வண்ண மைதீட்டிய கண்ணனின் மறுவுருவமான என் கண்ணனே....
மீண்டும் மீண்டும் உன்னுள் சிக்கிட தவிக்குதடா என் மனது....







© All Rights Reserved